வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து விவசாயிகள் போட்டி
விவசாய சங்கங்கள் டில்லியில் ஆலேசானை
தேசிய– தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது…
பா.ஜ., கட்சியின் தேர்தல் அறிக்கையில், விவசாய விளை பொருட்களுக்கு, இரண்டு மடங்கு லாபம் தரும் விலை நிர்யணம், விவசாயக் கடன்கள் ஒரு லட்சம் கோடி தள்ளுபடி, தனி நபர் இன்சூரன்ஸ், விவசாயிகளுக்கு மாதாந்திர பென்ஷன், நதிகள் இணைப்பு போன்ற அறிவிப்புகள் இடம் பெறும், என்று விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
ஆனால், இதில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதனால், சென்னை மற்றும் டில்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, ஏப்ரல் 21ம் தேதி, அனைத்து விவசாய சங்கங்களும் டில்லியில் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். அதில், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும். கடந்த 2019ல் நடந்த தேர்தலில், இதே போன்ற அறிவிப்பை வெளியிட்ட போது, விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அமித்ஷா உறுதியளித்தார். ஆனால், அதன் பின், ஐந்து ஆண்டுகளாகியும் ஒன்றும் செய்யவில்லை.
டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுபடி 23ஆம் தேதி ஜந்தர் மந்திரில் இந்தியா முழுவதும் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வாரணாசியில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை களத்தில் இறக்க திட்டமிட்டு உள்ளோம்.
அதனால், வரும் தேர்தலில், மோடியை எதிர்த்து போட்டியிடுவது பற்றி பேச உள்ளோம் என்றார். விவசாய சங்கத்தினர் மீது தவறான விமர்சனங்களை வெளியிடுபவர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.