அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் குறிப்பாக மேல் களவாய் கிராம பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக மழை வெள்ளத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நெல் மணிகள் முளைத்ததால்…
அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அறுவடை செய்யாமலேயே சேதத்தால்…
வடியாத வெள்ளம்… தீராத துயரத்தில் விவசாயிகள் கடும் வேதனை…
கடந்த 15 நாட்களாக விவசாய நிலத்தில் தேங்கும் மழை நீரால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்…
மேலும் விவசாயி கூறுகையில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 40 ஆயிரம் செலவு செய்து நெல் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும்போது நிலத்தில் புயல் வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் நெல் அறுவடை செய்வதற்கு செயின் இயந்திரம் நெல் அறுவடை வாகனத்தின் மூலம் நெல் அறுப்பதால் அதிக செலவாகிறது.
இதனால் பெரும் நஷ்டம் அடைந்து வேதனைக்கு உள்ளாகி வருகிறோம் மேலும் செயின் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்வதால் வைகல் வீணாகிறது. இதனால் நாங்க வளர்க்கப்படும் கால்நடைகளுக்கும் வைக்கோல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.
தமிழக அரசு விவசாயிகளின் வேதனையை அறிந்து பயிரிடப்பட்டு சேதமான பயிருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை கணக்கிலிட்டு உடனடியாக வழங்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் …