in

தென்காசி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் காவல் துறையினர் கைது செய்தனர்


Watch – YouTube Click

தென்காசி ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் காவல் துறையினர் கைது செய்தனர்

 

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசி ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய வருவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் ரயில் நிலையத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில், மண்டல தலைவர் செல்லத்துரை தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரயில் நிலையம் முன்பு வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணையாக பலம் வந்து ரயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

பைனான்ஸியரிடம் உதவி கேட்பது போல் நடித்து, பணம்- நகைகளை கொள்ளை

ரூ 1000 கோடி மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன-தங்கம் தென்னரசு பேச்சு….