in

மாமன்னர் மருது பாண்டியர்கள் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை

மாமன்னர் மருது பாண்டியர்கள் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை

 

மாமன்னர் மருது பாண்டியர்கள் திரு உருவ சிலைக்கு ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தார்

மாமன்னர் மருது பாண்டியர்களின் 223 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு இராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜா தனது குடும்பத்தார்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மதுரை கோமதிபுரத்திலிருந்து 100 வாகனங்கள் புடை சூழ இளைஞர்கள் பெரியவர்கள் மற்றும் ராமநாதபுரம் சமஸ்தான குடும்பத்தாருடன் ஊர்வலமாக மானகிரி, அண்ணாநகர் வழியாக மதுரை தெப்பக்குளம் மாமன்னர் மருதுபாண்டியர் சிலையை வந்தடைந்தார்

மாமன்னர் மருது பாண்டியர் சிலைக்கு இளைஞர்கள் கூட்டத்துடன் வந்து மாமன்னர் மருதிருவருக்கு வீரவணக்கம் மாமன்னர் மருதுபாண்டியர்கள்புகழ் வாழ்க என்ற முழக்கங்களோடு மருது பாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது

ராமநாதபுரம் சமஸ்தான குடும்பத்தார்களின் சார்பாக இளைய மன்னர் ஆர்.ஆதித்ய சேதுபதி மகாராஜாவாகிய நான் இன்று மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருதிருவர் சிலைக்கு எங்களது குடும்பத்தார்கள் மற்றும் இளைஞர்கள் பெரியவர்கள் கூட்டத்துடன் ஊர்வலமாக வந்து மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தேன்.

இங்கிருந்து புறப்பட்டு காளையார் கோவிலில் உள்ள மருதிருவர் நினைவிடங்களுக்கு சென்று அங்கு மரியாதை செய்ய இருக்கிறேன்.

இன்று காளையார் கோவிலில் எங்கள் குடும்பத்தார் சார்பாக மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது.

அதேபோல் ஜனவரி 30 ஆம் தேதி தெய்வீகத் திருமகன் தேவர் ஜெயந்தி முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க இருக்கிறோம்.

அதன் பின்னர் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறோம்.

தேவர் ஜெயந்தி முன்னிட்டு தேவர் ஜெயந்திக்கு முதல் நாள் இரவு ஜனவரி 29 இரவு முதல் பசும்பொன் வெள்ளைச்சாமி தேவர் நினைவிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள எங்களது அன்னதான பந்தலில் தொடர்ந்து 24 மணி நேரம் தேவர் ஜெயந்தி அன்று இரவு வரை அங்கு வருகை தரும் பொதுமக்கள் நம் இனத்தவர்கள் இளைஞர்கள் சிறியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பிக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் 100 வாகனங்களில் இளைஞர்கள் கூட்டத்துடன் கலந்து கொள்ள இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

What do you think?

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை ஒட்டி ஊர்வலமாக 1008 பெண்கள் பால்குட விழா

நரிக்குறவர் குழந்தைகளுக்கு புத்தாடைகளை தீபாவளிக்கு வாங்கி பரிசளித்த சமூக ஆர்வலர்