in

25 முட்டைகளுடன் கருவுற்றிருந்த பெண் நல்ல பாம்பு பலி – பொதுமக்கள் சோகம்

25 முட்டைகளுடன் கருவுற்றிருந்த பெண் நல்ல பாம்பு பலி – பொதுமக்கள் சோகம்

 

மதுரையில் ஜேசிபி-யால் இடிபாடுகளை அகற்றும் போது 25 முட்டைகளுடன் கருவுற்றிருந்த பெண் நல்ல பாம்பு பலி – பொதுமக்கள் சோகம்.

மதுரை அருகே ஜே சி பி கொண்டு இடிபாடுகளை அகற்றும் போது 25 முட்டைகளுடன் கருவுற்றிருந்த நல்ல பாம்பு ஆண் பாம்புடன் சேர்ந்து அடிபட்டு இறந்து போனது. அப்பகுதி மக்கள் பெரும் சோகமடைந்தனர்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே உள்ள கல்மேடு என்ற பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிபாடுகள் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது இடிபாடுகளுக்குள் ஐந்தடி நீளம் கொண்ட இரண்டு நல்ல பாம்புகள் பதுங்கி இருந்ததை கவனிக்காததால் அந்த கற்கள் சரிந்து பாம்புகள் மேல் விழுந்ததால் இரண்டும் உயிரிழந்தன.

இரண்டு பாம்புகளில் ஒன்று ஆண் மற்றொன்று பெண் ஆகும். இறந்து போன பெண் நல்ல பாம்பின் வயிற்றில் 25 முட்டைகள் இருந்தன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பெரிதும் சோகம் அடைந்தனர்.

தன்னார்வ பாம்பு மீட்பாளர் சகாதேவன் கூறுகையில், இதுபோன்ற இடிபாடுகளில் தான் பாம்புகள் பெரும்பாலும் பதுங்கி இருக்கும். ஆகையால் அவற்றை அகற்றும் போது மிகுந்த கவனத்தோடு அகற்றினால் தான் அவற்றை உயிரோடு மீட்க முடியும். கருவுற்றிருக்கும் பெண் பாம்புக்கு துணையாக ஆண் பாம்பு உடன் இருந்துள்ளது.

இவ்விரண்டு நல்ல பாம்புகளும் அதன் இனத்தோடு தான் இணை சேரும். சாரைப்பாம்போடு இணை சேரும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இது போன்ற பாம்புகள் தென்பட்டால் உடனடியாக எங்களைப் போன்ற மீட்பாளர்களிடம் தெரிவித்தால் நாங்கள் அவற்றை உயிருடன் மீட்டு காட்டுப் பகுதியில் கொண்டு போய் விட்டு விடுவோம் என்றார்.

ஒரே இடத்தில் வாழ்ந்து வந்த ஆண் பெண் இணை நல்ல பாம்புகள் கருவுற்றிருந்த நிலையில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

காஞ்சிபுரம் சங்கர மடப்பிடாதிபதி ஓரிக்கை மணிமண்டபத்தில் சாதூர் மாத விரதம் துவக்கம்

அழிந்துவரும் சர்க்கஸ் கலையை மீட்கும் சர்க்கஸ் குழுவினர்