மாணவிகளுக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் அம்பலமானது பெண் ஆசிரியரின் லீலைகள்
இங்கிலாந்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவர்களை ஆண், பெண் ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிழக்கு லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் 29 வயது பெண் ஒருவர் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்.
இதனிடையே, 16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முதலில், பள்ளி முழுவதும் இந்த பிரச்சினை பற்றி பேசப்பட்டது. இதனையடுத்து பள்ளி நிர்வாகம் விளையாட்டு ஆசிரியரை அழைத்து கண்டித்துள்ளது. ஆனால் அன்று இரவே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சிறுமியின் மொபைல் போனை சோதனையிட்டனர்.
சிறுமிக்கு ஆசிரியர் ஆபாசமான செய்திகளை அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. காதலர் தினத்தன்று, பாதிக்கப்பட்ட மாணவியை பள்ளி கழிவறையில் தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு ஆசிரியர் வற்புறுத்தியுள்ளார்.
பலமுறை மாணவியின் அனுமதியின்றி முத்தம் கொடுத்துள்ளார். இவை அனைத்தும் மாணவியின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இவை அனைத்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், ஆசிரியை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆசிரியை மற்றும் மாணவி ஒன்றாக இருந்த 400 புகைப்படங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில், சில புகைப்படங்களில் இருவரும் நிர்வாணமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆதாரங்களைச் சேகரித்து, ஆசிரியரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியையின் சுயநலம் மற்றும் முட்டாள்தனத்தால், நம்பிக்கைக்குரிய தொழிலை ஆசிரியை சீர்குலைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.
ஆசிரியை மீது இரண்டு அல்லது மூன்று சிறுமிகள் பாலியல் புகார் கூறியதையடுத்து நீதிபதி அவருக்கு வாழ்நாள் ஆசிரியர் பணிக்கு தடை விதித்துள்ளார். 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி, ஆசிரியர் தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்திய சம்பவம் இங்கிலாந்து முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆசியர்களை நியமிப்பதிலும், அவர்களைக் கண்காணிப்பதிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என நாட்டில் உள்ள பெற்றோர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.