கல்வி கூடங்களில் திரைப்பட விழாக்கள் நடத்த கூடாது ..விரைவில் தடை
இயக்குனர் அமீர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் சினிமா திரைப்பட விழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு பலமுறை வற்புறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டதாவது சமூக காலமாக கல்வி நிறுவனங்கள் சினிமா துறையில் பிரபலமானவர்களையும் Reels மூலம் சமூக வலைதளத்தில் வைரலானவர்களையும் Youtube பிரபலங்களையும் அழைத்து மாணவர்களுடன் உரையாடல் செய்வதும் விழாக்கள் நடத்துவதும்.
வணிக ரீதியாக அவர்களை பல படுத்த திரைப்படங்களை ஹிட்…டாக்க விழாக்களை கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஏற்பாடு செய்து மாணவர்களை கெடுக்கிறார்கள்.
திரை அரங்குங்கள் கல்வி கூடமாக மாற வேண்டுமே தவிர கல்விக்கூடங்கள் திரையரங்குகளாக மாறக்கூடாது.
இதனை மக்களும் அரசும் கவனத்தில் ஏற்றுக்கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இசை விழா மற்றும் திரைப்பட விழாக்களை கல்லூரிகளில் அனுமதிக்க கூடாது இதற்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று இயக்குனர் அமீர் கோரிக்கை வைத்துள்ளார்.