திரைப்படம் மனிதனை நல்லவனாக மாற்ற வேண்டும்…H. வினோத்
சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் Nandan திரைப்படத்தில் சமுத்திரகனி GM Kumar, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி உள்ளிட்டோர் நடிக்க.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எச் வினோத் மற்றும் சீமான் கலந்து கொண்டனர்..
தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லுவார் ஹீரோ. நந்தன் Trailer அனைவரையும் நெகிழ வைத்திருகிறது.
இயக்குனர் எச் வினோத் …நிகழ்ச்சியில் கூறியதாவது, நண்பர்களுடன் படம் பார்க்கும் பொழுது இந்த சினிமா என்னை கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டுவிட்டது.
என்னை பொறுத்தவரை எது நல்ல படம் என்றால் பெரிய பட்ஜெட்டுடன் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்படுவதும் இல்லை அதிக வசூலை குவிக்கும் படங்களும் அல்ல எந்த ஒரு படம் மனிதனை நல்லவனாக மாற்ற முயற்சிக்கிறதோ அதுவே சிறந்த படம் அந்த வகையில் தமிழ் சினிமா மனிதர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த படத்திற்காக நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம் முதலில் இந்த படத்தை நான் தயாரிப்பதாக கூறினேன் முடியாததால் நான்கு நாட்கள் மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டேன் அதன்பிறகு நானே இந்த படத்தில் ஹீரோ…வாக மாறி விட்டேன் என்றார்.