in

ஒரு வாரத்திற்குள் வேலையை முடிக்காவிட்டால் FIR போட்டு விடுவேன் என எச்சரித்த கூடுதல் ஆட்சியர் பிரியங்கா.


Watch – YouTube Click

கூடுதல் ஆட்சியர் முன்னிலையில் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் – ஒரு வாரத்திற்குள் வேலையை முடிக்காவிட்டால் FIR போட்டு விடுவேன் என எச்சரித்த கூடுதல் ஆட்சியர் பிரியங்கா.

திருவாரூர் மாவட்டம் கீழமணலி ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த செல்வி என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முழு பணத்தையும் பெற்றுக் கொண்டு, இதுவரை வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கீழமணலி ஊராட்சிக்குட்பட்ட சேந்தனாகுடி மற்றும் காரநாதன் கோவில் உள்ளிட்ட கிராமங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 43 வீடுகள் கட்ட முடிவெடுக்கப்பட்டு, கீழமணலி ஊராட்சி மன்ற தலைவி செல்வியின் கணவர் ரவிச்சந்திரன் பொதுமக்களிடமிருந்து 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது, அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கணவர் ரவிச்சந்திரன் மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதனால் கூடுதல் ஆட்சியர் முன்னிலையிலேயே பொதுமக்களுக்கும், ரவிச்சந்திரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, ஒருவாரத்திற்குள் 43 வீடுகளுக்கும் மேற்கூரை அமைத்து வீடுகளை கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இல்லாவிடில் பொதுமக்களின் பணத்தை எடுத்துக் கொண்டதாக வழக்கு பதியப்படும் என எச்சரிக்கை விடுத்தார்


Watch – YouTube Click

What do you think?

திண்டுக்கல்லில் கவனக்குறைவாக பஸ் ஒட்டிய டிரைவர் மீது நடவடிக்கை

படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு