இட்லி கடை செட்டில் தீ விபத்து
நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று படத்தின் இயக்கத்திற்கு பிறகு Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் சத்தியராஜ், ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி என்ற கிராமத்தில் ஷூட்டிங் காக இட்லி கடைகள் போன்ரு பல செட்டுகள் போடப்பட்டது.
20 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற பிறகு தற்போது வேறு இடத்தில் சூட்டிங் நடக்கிறது …. மீண்டும் அனுப்பப்பட்டியில் சூட்டிங் நடக்க திட்டமிட்டு இருப்பதால் பட குழுவினர் செட்…டை கலைக்காமல் அப்படியே விட்டனர்.
இந்நிலையில் நேற்று திடீரென்று செட்டில் தீ பிடித்தது மரங்களைக் கொண்டு போடப்பட்ட செட் என்பதால் தீ சரசரவென பற்றி எரிந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர் , தீ..இக்கான காரணம் என்னவென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.