in

மதுரையில் 14 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

மதுரையில் 14 மாடி கட்டிடத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: தத்ரூபமாக செய்து காட்டிய தீயணைப்பு வீரர்கள்

மதுரை டிஆர்ஓ காலனியில் 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு துறை தென்மண்டல துணை இயக்குநர் ராஜேஷ் தலைமையில் மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் முன்னிலையில் மண்டலங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கடந்த 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஐந்து நாட்களாக பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக கள்ளந்திரி வாய்க்காலில் நீரில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த பயிற்சி மற்றும் யானைமலை மேற்பகுதியில் சிக்கியவர்களை கயிறு மூலம் மீட்பு பணி மேற்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று டிஆர்ஒ காலனி உள்ள 14 மாடி கட்டிடத்தில் பேரிடர் விபத்தின் போது மீட்பது குறித்த பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

இங்குள்ள டிஆர்ஓ காலனியில் உள்ள 160அடி உயரமுள்ள 14 வது மாடி கட்டிடத்தில் தீவிபத்து உள்ளிட்ட பேரிடர் ஏற்படும் போது பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்பது போலவுமான ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 ஆவது மாடியில் இருந்து கயிறு கட்டி பத்திரமாக மீட்பதை தத்ரூபமாக செய்து காட்டினர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் , 2 தீயணைப்பு வாகனங்கள், 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று ஒத்திகையை செய்து காட்டினர்.

இதற்கான ஏற்பாடுகளை தல்லாக்குளம் தீயணைப்பு அலுவலர் அசோக்குமார் மற்றும் அனுப்பானடி தீயணைப்பு அலுவலர் கந்தசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

What do you think?

பாஜக அதிமுக நாதக மூவரும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும் அர்ஜுன் சம்பத் பேட்டி

GETOUT ஸ்டாலின் என விளக்கேற்றி கைகளில் பதாகைகளோடு முழக்கமிட்ட பாஜகவினர்