in

தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம்

தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடி பொருட்களை பாதுகாப்பாக கையாளுதல், முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்த பயிற்சி முகாம் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் பங்கேற்று பயிற்சி அளித்தனர் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரடியாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் நெருக்கடியான மயிலாடுதுறை பகுதியில் பட்டாசுகளை விற்பனை செய்பவர் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும், விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீயணைப்பு துறைக்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தெரிவித்தார்

What do you think?

தீபாவளி திருடர்களை பிடிக்க திருச்சியில் 185 இடங்களில் கண்காணிப்பு

துலா மாத பிறப்பை முன்னிட்டு தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் விமர்சையாக நடைபெற்ற தீர்த்தவாரி வைபவம்