in

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா


Watch – YouTube Click

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா

 

மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் மாசி பெருவிழா 5-ம் திருவிழாவான தீ மிதி திருவிழா நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற அங்காளம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மாசி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி அன்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மறுநாள் சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை அம்மன் பெண் பூத வாகனத்திலும், திங்கள்கிழமை சிம்ம வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை தீ மிதி திருவிழாவை முன்னிட்டு அன்று காலை மூலவர் அங்காளம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக தீப ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மேளதாளம் முழங்க உற்சவர் அங்காளம்மன் அக்கினி குளத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து பக்தர்கள் படை சூழ மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஊஞ்சல் மண்டபம் எதிரே குவிக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தின் முன் எழுந்தருளினார்.

தொடர்ந்து அக்னி குண்டத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் பூசாரிகள் தீ குண்டத்தில் இறங்கினர்.

பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, பெங்களூர், சேலம் மற்றும் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி, போன்ற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் வருகை புரிந்தனர்.

பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ் பூசாரி, உள்ளிட்ட அறங்காவலர்கள். கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் தீபக்சிவாச் உத்தரவின் பேரில் ஏ டி எஸ் பி ஸ்ரீதரன் தலைமையான 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்,

பாதுகாப்பு முன் ஏற்பாடுகளில் செஞ்சி, மேல்மலையனூர் தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவத்துறை,ஆம்புலன்ஸ் போன்றவை தயார் நிலையில் இருந்தன ….


Watch – YouTube Click

What do you think?

தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.சார்பாக மனிதசங்கிலி போராட்டம்

ஆதீன போலி விடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம்