in

காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய திருச்சி நிலைய தீயணைப்பு வீரர்கள்

காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய திருச்சி நிலைய தீயணைப்பு வீரர்கள்

 

தற்கொலை செய்வதற்காக காவிரி ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய திருச்சி நிலைய தீயணைப்பு வீரர்கள்

திருச்சி அண்ணா சிலை அருகே காய்கறி கடை வியாபாரம் செய்து வருபவர் பார்வதி நேற்று வீட்டிற்கு சென்ற பொழுது குடும்ப பிரச்னையில் சண்டை நடந்துள்ளது. கோபமடைந்த பார்வதி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

காவிரி ஆற்றில் குதித்த பார்வதி நீரில் அடித்து செல்லப்பட்டு அடுத்ததாக உள்ள ரயில்வே பால சிமெண்ட் கட்டையில் மோதி நின்றுள்ளார். அவரது கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக வந்து (பார்வதி வயது 45) அவரை கயிறு கட்டி மேலே ஏற்றி பத்திரமாக மீட்டு காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

நடக்க முடியாத நிலையில் இருந்த பார்வதியை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இரவு நேரத்தில் மிகுந்த சிரமப்பட்டு திருச்சி நிலைய தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பார்வதியை மீட்டதை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

What do you think?

வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை ரித்திகா

பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மாரத்தான் ஓட்ட போட்டி