புதுச்சேரியில் நடு வீதியில் பற்றி எரிந்த பைக் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்
புதுச்சேரி நடு வீதியில் பற்றி எரிந்த பைக்.
விழுப்புரம் பகுதியை சேர்ந்த சூர்யா இன்று மதியம் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட் எதிரில் இந்திராகாந்தி சிலையில் இருந்து நெல்லித்தோப்பு சிக்னலை நோக்கி இருசக்கர வாகனத்தில் வரும்பொழுது தீடிரென்று இருசக்கர வாகனம் தீ பிடித்த எரிந்தது இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு தள்ளி நின்றார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தார்கள். அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது….
முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் எரிபொருளை அதிகமாக நிரப்பியத்தின் காரணமாக பேட்டரியின் ஒயர் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது…