in ,

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: உண்மையை மறைக்கும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்

டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: உண்மையை மறைக்கும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்

 

ஒரு குழப்பமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஜூலை 13 அன்று பிரச்சார பேரணியில் நடந்தேறியது.

துப்பாக்கி ஏந்திய ஒருவரின் படுகொலை முயற்சியில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காதில் அடிபட்டு அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று FBI அடையாளம் கண்டுள்ளது.

மேலும் விசாரணை நடந்து வருகிறது. “உள்நாட்டு பயங்கரவாத” செயலாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்தது FBI ஆனால் அவர் தனியாக செயல்பட்டதாகத் விசாரணையில் தெரிகிறது.

78 வயதான முன்னாள் ஜனாதிபதி, பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு முகத்தில் இரத்தம் வழிய மேடையில் இருந்து வெளியேறினார்.

அதே நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் மற்றும் பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பார்வையாளர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவதிற்கு வருத்தம் தெரிவித்து x தளத்தில் ஜனாதிபதி ஜோ பிடேன் பதிவிட்டதாவது, “எனது நண்பரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைகிறேன்” என்று X இல் பதிவிட்டுள்ளார்.

“இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். வன்முறைக்கு அரசியலிலும் ஜனநாயகத்திலும் இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

What do you think?

ரங்கோலியில் காமராஜர் உருவப்படத்தை வரைந்த புதுச்சேரி காவல்துறை உதவி ஆய்வாளர்

Today Headlines