டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக சுல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை சென்னை கிளெனீகல்ஸ் உடன் இணைந்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இளைஞருக்கு பொருத்தப்பட்டிருக்கிறது
மீனாட்சி மருத்துவமனை மற்றும் சென்னை கிளெனீகல்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவினர் 8 மணி நேரம் நீடித்த சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
பல்வேறு உறுப்புமாற்று சிகிச்சைகளுக்கு இந்தியாவில் புகழ்பெற்ற மையங்களில் ஒன்றாக சென்னையில் அமைந்திருக்கும் கிளெனீகல்ஸ் மருத்துவமனையுடன் டெல்டா பகுதியில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் கொண்ட முன்னணி மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து செயல்படுகிறது.
கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை நிபுணர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்து மீனாட்சி மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகளை ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.