தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கிறது.
மாநாடு திடலை சுற்று ஆங்காங்கே 3 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 20,000 மின் விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்த 200 ஏக்கர் பரப்பளவில் 4 பார்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நிகழ்ச்சியை பார்க்கும் வகையில் 72 LED திரைகள் என இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொண்டர்கள், ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோளை தொடர்ந்து வைத்து வருகிறார்.
தமிழக வெற்றிக்கழக மாநாடு என்பது அதிகபட்சமாக இரவு 9 மணிக்குள் முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விழுப்புரத்தை விட்டு வெளியறவே கிட்டதட்ட 3 மணி நேரம் ஆகும் என்ற காரணத்தால், இரவு 9 மணி அளவியில் மாநாடு நிறைவு செய்யப்படும் என்று கட்சியினரால் கூறப்படுகிறது.
முன்னதாக தவெக கட்சி ஒரு ரசிகர் மன்றமாக இருந்து, மக்கள் இயக்கமாக மாறி, எப்படி கட்சியாக உருவெடுத்தது என்பது குறித்தான 18 நிமிட வீடியோவை மதியம் 3.30 மணி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த வீடியோ வெளியிட இருக்கிறார். இதனைத்தொடர்ந்து தொடக்க உரை ஒன்று அமைந்துள்ளது. பிறகு விஜய் கட்சி கொடியை ஏற்றுவார்,
இதை அடுத்து கட்சியின் செயல்திட்டம், கொள்கைகள் என அனைத்தும் வெளியிடப்பட இருக்கிறது.. இதற்கு முன்னதாக, கட்சியின் சார்பாக முதல் மாநில மாநாட்டிற்கான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
மேலும், விஜய்யின் உரை இரண்டு மணி நேரம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்போதே கூட்டம் கூட்டமாக மாநாட்டு திடலுக்குள் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.. ! கூட்டத்தினருக்கு பிச்கெட், மிக்சர், தண்ணீர் பாட்டில் மட்டும் ரெடி செய்து வைத்துள்ளனர்.