in

பூம்புகாரில் மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் வேலைநிறுத்தம்

பூம்புகாரில் மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் வேலைநிறுத்தம்

 

பூம்புகாரில் மீனவர்கள் நான்காவது நாளாக தொடர் வேலைநிறுத்தம், கைது செய்யப்பட்ட மீனவர்கள் படகுடன் விடுவிக்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிப்பு.

பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் செல்லத்துரை (வயது 60) இவரது விசைப்படகில் 37 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு இலங்கை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் கிராமங்களில் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக 500 பைபர் படகுகள் 100 விசைப்படகுகள் நான்காவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. தினமும் பரபரப்பாக காணப்படும் பூம்புகார் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்படும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

What do you think?

தருமபுரம் ஆதீன பள்ளி மாணவ, மாணவிகள் 74 பேர் பதக்கம் வென்று சாதனை

மகேந்திரா தார் ராக்ஸ் வாகன அறிமுக விழாவை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்