புதுச்சேரி கடலில் விசைப்படகுகளுடன் மீனவர்கள் தேசியக்கொடி அணிவகுப்பு
துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் சபாநாயகர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தேசப்பற்றை மெய்சிலிர்க்க வைத்த கழுகு காட்சிகள்..
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற உள்ள 78-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு. சுதந்திரத்தினை போற்றும் வண்ணம் ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக்கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தியது. நாடு முழுவதும் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கலை பண்பாட்டு துறை இணைந்து கடல் பகுதியில் மீன்பிடி படகுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்த கடலில் படகு அணி வகுப்பு நிகழ்ச்சியை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தேசியக் கொடியுடன் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு அணிவகுப்பு நடத்தினர்.