வேதாரணியம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்
விதிமீறலில் ஈடுபடும் விசைப்படகின் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேதாரணியம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் வலையை கடலில் இறக்கி நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக மீன்பிடித்துக் கொண்டு வந்த நாகை பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆறுக்காடுத்துறை மீனவர்களின் வலையின் மீது விசை படகை ஏற்றி வலையை சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
பைபர் படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியதைக் கண்டித்து ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த பைபர் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்ததப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விசைப்படகு மீனவர்கள் ஐந்து நாட்டிக்கல் தொலைவிற்கு பிறகு தொழில் செய்ய வேண்டும் என அறிவிப்பு இருந்தும் அதனை மீறி தொடர்ச்சியாக நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையாக இழுவை மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது மட்டுமின்றி நாட்டுப் படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.