in

நீதி கேட்டு மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


Watch – YouTube Click

நீதி கேட்டு மீனவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 

கடந்த 25ஆம் தேதி இரவு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இரண்டு நாட்டிகல் மைல் தொலைவில் அக்கரைப் பேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 மீனவர்கள் சீச்சாங்குப்பத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர் உடன் ஏற்பட்ட தகராற்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் உயிரிழந்த மீனவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டும் இழுவை மடி வலையை தடை செய்ய வேண்டும். 1983ல் நாட்டு படகு மீனவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தாலுகாவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இழுவை மடி வலையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் சுமார் 15 -க்கும் மேற்பட்ட வேன்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

தீ விபத்து வதந்தி அலறி அடித்து ஓடியதில் ரயில் மோதி 2 பேர் பலி

மத்திய அரசை கண்டித்து கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டம்