in

டிராக்டர்கள் உதவி கொண்டு படகுகளை கரையேற்றும் மீனவர்கள்

டிராக்டர்கள் உதவி கொண்டு படகுகளை கரையேற்றும் மீனவர்கள்

 

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக டிராக்டர்கள் உதவி கொண்டு படகுகளை கரையேற்றும் மீனவர்கள்

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறை தரங்கம்பாடி பூம்புகார் வானகிரி திருமுல்லைவாசல் பழையாறு
சந்திரபாடி உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் உள்ளனர்.

விசைப்படகுகளை மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள நிலையில் 3000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரைகளில். இந்நிலையில் காற்று பலமாக வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் வானகிரி கிராமத்தில் தங்கள் படகுகளை டிராக்டர் உதவி கொண்டு மேடான பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல் வலைகளையும் பாதுகாப்பாக கரை ஏற்றி வைத்துள்ளனர். நேற்றுடன் ஒப்பிடும் பொழுது கடல் சீற்றம் சற்று தனித்துள்ள நிலையில், புயலுக்கு முன் ஏற்படும் அமைதி போல் உள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

What do you think?

விடாமுயற்சி teaser அவுட்… பொங்கல் ரேஸில் முந்தும் அஜித்தின் திரில்லிங்..?

ஜிஎஸ்டி வரி எதிரொலி: மதுரையில் இன்று கடையடைப்பு போராட்டம்