மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 8500 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என இந்தியவானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இதனால் தமிழக மீன்வள துறை சார்பில் மீனவர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதில் நெல்லை மாவட்ட கடலோர கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல் இடிந்தகரை, தோமையார்புரம், உவரி கூட்டப்பனை, கூடு தாழை, பெரியதாழை போன்ற மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கனமழை காரணமாகவும் கடலில் 45 இல் இருந்து 55 கிலோமீட்டர் வரை காற்று வேகமாக வீச கூடும் என்பதாலும் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தை சுமார் 9000 க்கும் மேற்பட்ட
நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளை கரையோரங்களில் நிறுத்தியுள்ளனர்.
இதனால் மீனவர்கள் படகுகள் மீன்பிடி வலைகளை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.