கடல் அரிப்பில் இருந்து தற்காலிகமாக தப்பியுள்ள மீனவ கிராமங்கள்..
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை…
புதுச்சேரியின் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பிள்ளைச்சாவடி, கனக செட்டிகுளம், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு ஆகிய மீனவ கிராமங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளன.ஒவ்வொரு இயற்கை பேரிடர் காலத்தின் போது இந்த கிராமங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும்.
இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது.
கடலோரப் பகுதியில் இருந்த ஒருசாலை மற்றும் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், பூவ மரங்கள் வேறோடு அடித்து செல்லப்பட்டன.மேலும் மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் களம் இரண்டும் கடலலை சீற்றத்தில் சிதைந்தன.
இந்தப் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்தின் ஏற்பாட்டின் பெயரில் அரசு கல் கொட்டும் பணியை மேற்கொண்டது.
இதன் காரணமாக தற்காலிகமாக கடல் அரிப்பு தடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் படகுகளையும் வலைகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும் அரசின் அறிவிப்பு படி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் நேரில் மீனவர்களை சந்தித்து வலியுறுத்தினார்.
பிள்ளை சாவடியில் இருந்து கனகசெட்டிகுளம் வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கல் கொட்டப்பட்டு மக்களுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.
நிரந்தர தீர்வு காண 310 கோடி ரூபாய் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.
பேட்டி.. கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்..காலாப்பட்டு..
அரசு தற்போது எடுத்துள்ள நடவடிக்கை தற்காலிகமாக இருந்தாலும் தற்போது பாதுகாப்பாக படகுகளும் மீன்பிடி வலைகளும் உள்ளன. புயலின் சீற்றம் அதிகமானால் தான் பாதிப்பு தெரிய வரும் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.