திருக்குறுங்குடி ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயர் தேவஸ்தான திருக்கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில் ஐந்து கருடசேவை
திருக்குறுங்குடி ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயர் தேவஸ்தான திருக்கோவிலில் பங்குனி திருக்கல்யாண பிரம்மோற்சவ திருவிழாவில் ஐந்து கருடசேவை வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் பாண்டியநாட்டில் 18 திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தலையாய திருத்தலமாக நெல்லை மாவட்டம் மேற்குதொடா்ச்சி மலை மகேந்திரகிரி அடிவாரத்தில் உள்ள திருக்குறுங்குடியில் ஸ்ரீ சுவாமி அழகிய நம்பிராயா் தேவஸ்தான திருக்கோயில் அமைந்துள்ளது. சுமாா் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத் திருத்தலத்தில் அழகியநம்பி, வீற்றிருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல்நம்பி திருமலைநம்பி என ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கின்றாா்.
இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் என நால்வா் பாடல் பெற்ற திருத்தலம். திருஅரங்கனால் நம் தெற்கு வீடு என்று போற்றப்பட்ட இத் திருத்தலத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு பொிய வீடு பேற்றை (முக்தி) அளித்தான்.
எம்பெருமானாா் என்று போற்றப்படும் ராமாநுஜாிடம் உபதேசம் பெற்று சிஷ்யனாக நின்றான். பழமையும் பல்வேறு சிறப்பகள் கொண்ட இத் திருத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும் பங்குனியில் வரும் பிரம்மோற்சவம் சிறப்பாக 11 தினங்கள் கொண்டாடப்படுகின்றது. இதற்கான கொடியேற்றம் கடந்த 14ம் தேதி திருக்குறுங்குடி ஸ்ரீ பேரருளாளா இராமானுஜ ஜீயா் சுவாமிகள் அனுக்கிகத்துடன் ஆரம்பமமாகியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை வெள்ளி தோளுக்கிணியானில் உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரபாிபூரணா் வீதி புறப்பாடு அதனை தொடா்ந்து மட்டையடி மண்டபத்தில் உபயதார் சிறப்ப திருமஞ்சனம் மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடும் நடைபெற்றது.
விழாவின் ஐந்தாம் திருநாளான இன்று காலையில் தயாா்கள் சமேத ஐந்து பெருமாள்களுக்கும் மட்டையடி மண்டபத்தில் உபயதார் சிறப்ப திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் அழகிய நம்பிராயா் தங்க கருட வாகனத்திலும் மற்ற நம்பி பெருமாள்கள் கருட வாகனத்திலும் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி கொடுத்தனா்.
தொடா்ந்து திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருள கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. ஜீயா் சுவாமிகளுக்க மதியாதை செய்யப்பட்டு தீா்த்தம் சடாாி வழங்கப்பட்டது. தொடா்ந்து பெருமாளுக்கு பிாியமான நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை ஜீயா் சுவாமிகள் தலைமையில் பிரபந்த கோஷ்டியினா் பாடினா்.
ஸ்ரீ சுந்தரபாியூரணருக்கு குடைவாயில் தீபாராதனை நடைபெற்றது. திருக்கோயிலிருந்து வெளிவந்த ஐந்து பெருமாள் கருட வாகனத்திற்கும் திருக்குடைகள் சாற்றப்பட்டு வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலையில் கருட வாகனத்தில் ஏழுந்தருளிய ஐந்து நம்பிகள் மநே்திரகிாி பா்வதத்தில் இருக்கும் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வினை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தாிசித்து பேரானந்தம் அடைந்தனா். திருவிழா ஏற்பாடுகளை திருக்குறுங்குடி ஜீயா் மடத்தினா் செய்திருந்தனா்.