in

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா கொடியேற்றம்

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா கொடியேற்றம்

 

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது ! இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் !

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசுவாமி திருக்கோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் ஏழு நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட பழமையான திருக்கோயிலாகும்.

இங்கு இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார், இராமபிரான் சீதா தேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் ராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் விணையும் மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்தியப்படி காட்சியளிக்கிறார்.

இத்தகைய சிறப்பு ஸ்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் சமேதராய் தங்க கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்திய இசை முழங்க, கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்ற, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

விழாவில் 4ம் நாள் நிகழ்ச்சியாக 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்க கருடசேவையும், தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாள் நிகழ்ச்சியாக 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இராமநவமியினை முன்னிட்டு ஸ்ரீ ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது.

10 ஆம் நாள் 18 ஆம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகமும் 8 ஆம் தேதி ராஜ உபசார திருமஞ்சனத்துடன் இவ்வாண்டிற்கான ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது.

What do you think?

வெண்மை நிறம் பூசப்பட்டு, வேலுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜகோபுரம்

தஞ்சை பெரிய கோவில் உலக நாடக நாள் விழா