நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம்
கும்பகோணத்தில் தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற தலமாகும் , ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை பெற்றார்.
சூரிய பகவான் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் தன் ஒளிக்கதிர்களால் வழிபாடு செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது பல்வேறு சிறப்புகள் பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்
அதே போல இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சூரியபிரபை, சந்திர பிரபை,பூத வாகனம், ஷேச வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருநாளான 6 ஆம் தேதி ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 7ஆம் திருநாளாக 8 ஆம் தேதி திருக்கல்யாணம் உற்சவமும், ஒன்பதாம் நாள் விழாவாக 10 ஆம் தேதி திருத்தேரோட்டம் பத்தாம் நாள் விழாவாக 11 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது. 11 ஆம் நாள் 12 ஆம் தேதி ஸப்தாவரணம், 12 ஆம் நாள் 13 ஆம் தேதி விடையாற்றி, வீதியுலா 13 நாள் 14 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தைடன் இவ்வாண்டுடிற்கான விழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.