ஸ்ரீபேராட்சி அம்பாள் திருக்கோவிலில் ஐயப்ப பக்தர்களின் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது . நூற்றுகணக்கான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர்.
நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பேராத்து செல்வி அம்மன் திருக்கோவில். இப் பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவிலாக விளங்குகின்றது. பல்வேறு திருவிழாக்கள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றது. இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுவாமி ஐயப்பன் சன்னதயில் இந்த காா்த்திகை மாா்கழி மாதத்தில் ஐயப்ப பக்தா்கள் விரதமிருந்து வழிபாடுகள் செய்து சபரி மலை செல்கின்றனா்.
அதன் ஒரு நிகழ்வாக பாலசாஸ்தா ஐயப்ப சேவ சங்கத்தின் சார்பில் ஐயப்ப பக்தர்கள் 25ம் ஆண்டாக பூக்குழி இறங்கும் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு பேராட்சி அம்பாள் கோவிலில் காலையில் சகஸ்ரநாமம பாராயணம், புஷ்பாஞ்சலி போன்றவைகள் அம்மனுக்கு நடைபெற்றன. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பர் விதி உலா நடைபெற்றது. தொடர்ந்து விரதமிருந்து பூக்குழி இறங்கும் பக்தர்கள் தாமிரபரணி நதிக்கரையிலிருந்து தீர்த்தம் எடுத்து பூச்சட்டி ஏந்தி ஊரை ஊர்வலமாக வந்தனா்.
திருக்கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த 30 அடி பூக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்திகொண்டும் பச்சிளம்குழந்தைகளை சுமந்துகொண்டும் சரண கோஷத்துடுன் பூக்குழி இறங்கினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்