புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் நடத்திய நாட்டுப்புறக்கலைவிழா 2024 ஜோதி சிலம்பம் சத்ரியகுருகுலம் பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது.விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் கலந்து கொண்டு 86 கலைஞர்களுக்கு கலைரத்னா விருது.2024 வழங்கி சிறப்புரையாற்றினார்.
வரவேற்புரை நெறியாள்கையினை சங்க நிறுவனர் கலைமாமணி டாக்டர் தமிழ்வாணன் வழங்கினார்.துவக்க நிகழ்வாக மங்கள இசையினை அமைப்பு செயலர் கலைமாமணி விஜயகுமார் செயற்குழு உறுப்பினர் கலைமாமணி மோகன் குழுவினர் வழங்கினர்.
விழாவிற்கு சங்க பொதுச்செயலர் கலைமாமணி டாக்டர் ஜோதி செந்தில்கண்ணன் தலைமையேற்றார் தலைவர் கலைமாமணி ஓவியர் அரியபுத்ரி பொருளாளர் கலைமாமணி டாக்டர் சுவாமிதாசன் வாழ்த்துரை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலைமாமணிகள் ராஜாராம் இரவி அன்பழகன் பழனி குமரன் பெரியசாமி இராஜ்குமார் ஆகியோர் நோக்கவுரை மற்றும் மகிழ்வுரை வழங்கினர்.விழாவில் பறை பம்பை உடுக்கை இசை. சிலம்பம் மல்யுத்தம் கரலாக்கட்டை சுருள் களியாட்டம் கரகாட்டம் பொய்க்கால் ஆட்டம் ஒயிலாட்டம் மயிலாட்டம் காவடியாட்டம் போன்ற ஏராளமான நாட்டுப்புறக்கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர் சங்கம் சார்பில் 350 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது நிகழ்வின் மேலான்மையினை கலைரத்னா துளசி கிருஷ்ணா கலைரத்னா பைரவி கலைரத்னா ஆரோக்கியராஜ் செய்திருந்தார் நிறைவாக செயலர் கலைமாமணி குமார் நன்றியுரை வழங்கினார்