செஞ்சி நகர சன்மார்க்க சங்கம் சார்பில் வள்ளலார் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
தைப்பூசம் என்றால் வள்ளலார் வள்ளலார் என்றால் தைப்பூசம் என்று விளங்கிவரும் நிலையில் தைப்பூசத் திருநாளில் அன்று 154 வது ஜோதி தரிசனத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் ஆங்காங்கே வள்ளலாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் தைபூச திருவிழா 154 -வது ஜோதி தரிசனத்தை முன்னிட்டு 33 -வது அண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி திருவண்ணாமலை சாலையில் ஐசிஐசிஐ. வங்கி எதிரே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி நகர சன்மார்க்க சங்க தலைவர் பி.தணிகாசலம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தலைமை வகித்தார்.
செயலாளர்வி.சம்பத், பொருளர் எம்.பரத்குமார் துணை தலைவர் டி.சக்திகணேஷ், ஆகியோர் முன்னிலையில் ஜோதி வழிபாட்டை தொடங்கி வைத்து
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகள் செஞ்சி நகர சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.