1 நிமிடத்திற்கு ரூ. 1 கோடிரஜினிகாந்த்திற்கு ரூ. 40 கோடி சம்பளமா?..
சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் திருச்சியில் வெளியாகும் லால் சலாம் படத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படம் பதித்த கொடியுடன் வந்த ரஜினி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை முதன்மை கதாபாத்திரங்களாக வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மனிதநேயம், ஒற்றுமை, சகோதரத்துவத்தை முன்னிலைப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் லால் சலாம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் உலகம் முழுக்க இன்று திரையரங்குகளில் வெளியாகிறது..
ரஜினிகாந்த் இந்த படத்தில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அதன்படி 1 நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்கிற கணக்கில் ரூ. 40 கோடி சம்பளமாக ரஜினிகாந்த் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை, தமிழகத்தில் சில திரையரங்குகளில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திரையரங்குகளில் லால் சலாம் திரைப்படம் வெளியானது.
திருச்சி மாரிஸ் திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தினை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நடனம் ஆடி ரஜினி ரசிகர்கள் லால் சலாம் படத்தை கொண்டாடினர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவத்துடனும்,
சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என்ற வசனம் பொருத்திய கொடியை ரஜினி ரசிகர்கள் அறிமுகம் செய்தது அனைவரையும் உற்று நோக்க வைத்தது.