முதல் முறையாக ஹீரோ ஹீரோயின் இல்லாமல் வெளிவந்த AI திரைப்படம்
சாதாரண படம் எடுப்பதிற்கே பட்ஜெட் கோடிகளை தொட்டுவிடும் காலகட்டத்தில், கர்நாடகாவை சேர்ந்த இளைஞசர் வெறும் ₹10 லட்சத்தில் படம் தயாரித்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்..
ஹீரோ, ஹீரோயின் இசையமைப்பாளர், ஒளிபதிவாளர் இல்லாமல் . “லவ் யூ” என்று பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், முற்றிலும் செயற்கை நுண்ணறிவைச் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
நரசிம்ம மூர்த்தி இயக்கிய “லவ் யூ”, இந்தியாவின் முதல் முழு AI-படம்., நரசிம்ம மூர்த்தி Graphic Designer நூதன்…னுடன் இணைந்து சுமார் 30 AI கருவிகளைப் பயன்படுத்தி படத்தை உருவாக்கியுள்ளார்.
₹10 லட்சரூபாய் AI மென்பொருள் வாங்க மட்டுமே செலவானதாம் 95 நிமிடம் ஓட கூடிய கன்னட மொழி படமான லவ் யூ” …விற்கு தனிகை குழு U/A சான்றிதழ் கொடுத்திருகிறது.
இந்தப் படம் வெறும் ஆறு மாதங்களில் நிறைவடைந்துள்ளது, திரைப்படத் தயாரிப்பின் நேரத்தையும் செலவையும் வெகுவாகக் குறைத்திருகிறது AI டெக்னாலஜி.
டீசர் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், “லவ் யூ” திரைப்படம் தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை மாற்றகூடும் என்பதில் ஐயம் இல்லை.
இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் அணிவகுப்பு கணிசமாக உயரும் . இந்திய சினிமா மாபெரும் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருகிறது.