in

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட புதுச்சேரியில் முதன்முதலாக அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ தேர்வு தொடங்கியது

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட புதுச்சேரியில் முதன்முதலாக அனைத்து அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ தேர்வு இன்று தொடங்கியது

இந்த தேர்வை, பன்னிரண்டாம் வகுப்பை சேர்ந்த 5763 மாணவ மாணவிகளும் பத்தாம் வகுப்பை சேர்ந்த 5940 மாணவ, மாணவிகளும் எழுதுகின்றனர்

மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதன் முதலாக புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 2024-25 -ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.சி., பொதுதேர்வு இன்று தொடங்கியது.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் 15.02.2025 முதல் 04.04.2025 வரை புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் நடைபெற உள்ளது.

இதற்காக புதுச்சேரி பகுதியில் 21 தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 10 தேர்வு மையங்களும் , மாகி பகுதியில் 3 தேர்வு மையங்களும் மற்றும் ஏனாம் பகுதியில் 2 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வினை புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம், ஆகிய நான்கு பிராந்தியங்களில் இருந்து மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வை 60 அரசு பள்ளிகளை சேர்ந்த 5763 மாணவர்களும், 10-ம் வகுப்பு பொது தேர்வை 125 அரசு பள்ளிகளை சேர்ந்த 5940 மாணவ மாணவிகளும் எழுதுகின்றனர்.

தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில் காலையில் எழுந்த மாணவர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து தேர்வு எழுத வந்தனர் அப்போது அவர்களுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர் மேலும் மாணவ மாணவிகளும் உற்சாகமாக தேர்வை எழுத ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேர்வின்போது தடையின்றி மின்சார சேவை ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அலைபேசி (Mobile Phone) மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.

தேர்வு அறையில் மற்றும் தேர்வு மையத்தில் ஒழுங்கீன செயலில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை அளிக்கப்படும் எனவும் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

What do you think?

புதுச்சேரி தவளைகுப்பம் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்

புதுச்சேரியை முத்தியால்பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சிபிஎஸ்இ பொது தேர்வு தேர்ச்சி பெற வேண்டி ஸஹஸ்ர நாம அர்ச்சனை