in

எங்களை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் இல்லை

எங்களை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி, அதிகாரப் பகிர்வு என்பது அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் இல்லை

பொங்கல் தினத்தில் தேர்வு வைத்தால் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதை தெரிந்து வேண்டுமென்றே மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறார்கள்

சிபிஐஎம் மாநில பொதுச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் மதுரையில் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் மதுரை மாநகர் சார்பில் 24 மாநாடு சிபிஐஎம் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேசுகையில்,

மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக அதிகப்படியான வெற்றி பெற்று உள்ளது. இது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. எவ்வாறு நடந்தது என்று பல கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்கள் வழங்கக் கூடாது என்று பாஜக தெரிவித்தது ஆனால் அதே பாஜக தான், மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை கொடுப்பது போல், இலவசங்களை அறிவித்துள்ளது. மற்றவர்களுக்கு ஒரு நியாயம் பாஜகவிற்கு ஒரு நியாயம், பாஜக தேர்தல் வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும்.

வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டம் மோடி அரசாங்கம் மகாராஷ்டிரா வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மோசமான சட்டங்களை இயற்ற பாஜக முற்படும்.

அரசியல் சாசனத்திற்கு சமாதி கட்டுகின்ற ஏற்பாடாக தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தை எதற்கும் வகையில் நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். பேசி குடியுரிமை சட்ட திட்டத்தை அமலாக்குவது, ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற மோசமான திட்டத்தை பாஜக அமல்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் பொருள் விலை குறையும்போது பெட்ரோல் விலையை மோடி அரசு குறைக்க மறுக்கிறது.

கடந்த ஒரு வருடமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. பிரதமர் மோடி இஸ்ரேல், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு செல்கிறார். சொந்த நாட்டில் மணிப்பூர் கலவர பூமியாக மாறி உள்ளது. அந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்லாமல் இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இவர்களே கலவரத்தை தூண்டிவிட்டு அதை முடித்து வைக்க முடியாமல் அவஸ்தப்படுகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் சென்று இலவசங்களை கொடுக்கக் கூடாது என பாஜக வழக்கு போட்டார்கள், மகாராஷ்டிராவில் மாதம் மாதம் மகளிர்க்கு உரிமை தொகை கொடுக்க உள்ளோம் என்று தெரிவிக்கிறார்கள். பாஜகவிற்கு ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு கொள்கையா? தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளன்று மத்திய அரசு தேர்வை அறிவிக்கிறார்கள். வேண்டுமென்றே பொங்கல் தினத்தில் தேர்வை அறிவித்து மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் விரோதமான அணுகுமுறையாக நாங்கள் இதை பார்க்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை வேற மாதிரி வைத்திருக்கிறோம் அமைச்சர் பதவி வாங்குவது மட்டும் அதிகார பகிர்வு கிடையாது, கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அந்த திட்டத்தை செயல்படுத்துகிற கூட்டணி அமைய வேண்டும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மதுரை அரித்தாப்பட்டியில் கனிம வளங்களை கொள்ளை அடிக்க திட்டமிட்டிருக்கும் பாஜக அரசு வன்மையாக கண்டிக்கிறோம். என்று தெரிவித்தார்.

What do you think?

ஜப்பானில் கிளி ஜோசியம் பார்த்து மொக்கை வாங்கிய இர்பான்

புதுச்சேரி முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் பத்மஸ்ரீ விருது பெற்ற முனுசாமி கல்லூரி மாணவர்களுக்கு களிமண்ணால் பொம்மைகள் செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.