பழனி முருகன் கோயிலில் வேட்டி , சேலை அணிந்து வந்த வெளிநாட்டினர்
பழனி முருகன் கோயிலில் வேட்டி , சேலை அணிந்து வந்த வெளிநாட்டினர் தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமே இல்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்களுக்கு வருகின்றனர்.
இன்று அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 10 பெண்கள் உட்பட 20 பக்தர்கள் தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து வந்து பழனி முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர் .
படிப்பாதை வழியாக மலைக்கோயில் சென்று பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு, போகர் சித்தர் சன்னதிக்கு சென்று வழிபட்டனர். தொடர்ந்து கோவில் மண்டபங்களில் உள்ள சிற்பங்கள் பார்த்து ரசித்தனர்.