in

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மேகமலை அருவிக்கு தினமும் தேனி மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேகமலை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.

மேலும் நாளை தேனி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே அருவியல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகமலை அருவியில் திடீர், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காப்பாற்றியதையும் கருத்தில் கொண்டு மேகமலை வனத்துறையினர் மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் கனமழைக்கான எச்சரிக்கை முடிவடைந்து நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் என அறிவித்துள்ளனர்.

What do you think?

செங்கம் அருகே நடைபெற்ற எருது விடும் விழா சீரிபாய்ந்த காளைகள்

ஹெலிகாப்டர் விபத்து ஈரான் அதிபர் உயிரிழப்பு