in

மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு விசாரணை மேற்கொள்ளும் வனத்துறையினர்


Watch – YouTube Click

மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு விசாரணை மேற்கொள்ளும் வனத்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் கீழ் மழை யானை. காட்டுமாடு. சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன

கடந்த சில வருடங்களாக உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் யானைகள் மற்றும் காட்டு மாடுகள் விவசாயம் நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கும் வனத்தில் இருந்து வெளியே வருவது வழக்கமாகிவிட்டது

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்களுக்கு மின்சாரம் வனப்பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆண் யானை ஒன்று உணவு தேடி வனப்பகுதி வழியாக வந்ததாக கூறப்படுகிறது இதில் தோனிமலை குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின்சார கம்பியில் யானையின் பாகம் பட்டு மின்சாரம் தாக்கி சுமார் 200 அடி பள்ளத்தில் யானை தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது இதை எடுத்து

தோனிமலை பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை இப்பகுதியில் யானை போன்று பள்ளத்தில் விழுந்து கிடப்பதாக பார்த்து கன்னிவாடி வனச்சர அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர்

அங்கு சென்ற மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜ்குமார் மற்றும் வன அதிகாரிகள் தற்போது யானை இறந்து கிடந்தது குறித்து விசாரணை மேற்கொள்கின்றனர் அதேபோல் யானை எதனால் இறந்தது என்பது குறித்து சம்பவ இடத்தில் கால்நடை மருத்துவர்கள் உடல் பரிசோதனையும் செய்து வருகின்றனர்

மலைப்பகுதியில் மின்சாரம் தாக்கி யானை இறந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


Watch – YouTube Click

What do you think?

மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் போலீஸ் தீவிர விசாரணை

அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த நாளை பாடலீஸ்வரர் திருக்கோவிலில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது