சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவு
கொல்லிமலை பகுதியில் கனமழையால் புளியஞ்சோலையில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவு
திருச்சியிலிருந்து 72கிமீ தொலைவில் அமைந்துள்ள ஏழைகளின் குற்றாலம் எனப்படுவதும், கொல்லிமலை அடிவாரத்தில் சிறந்த சுற்றுலா தலமான புளியஞ்சோலை அமைந்துள்ளது.
இதனிடையே கொல்லிமலையில் கோடையில் பெய்துவரும் கனமழையால் புளியஞ்சோலை வழியாக வரும் அய்யாறு ஆற்றில் தற்போது தண்ணீர் செம்மண் நிறத்தில் வெள்ளமென மிகுந்த ஆர்பரிப்புடன் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் ஆற்றில் குளிக்கும்பட்சத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லும் நிலை ஏற்படும், எனவே புளியஞ்சோலை சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கைவிடுத்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.
கடந்த வாரம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி சிவக்குமார் என்பவர் தட்டாமேடு பகுதியில் ஆற்றில் குளிக்கும் போது உயிரிழந்தார், எனவே தற்போது தட்டா மேடு பகுதியை பொக்லின் இயந்திரம் கொண்டு வனத்துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.