கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள
தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் திரு பா. சிவக்கொழுந்து அவர்களுக்குஆதரவாக முரசு சின்னத்தில் முன்னாள் அதிமுக முதல்வர் முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் கடலூரில் உள்ள மஞ்சை மைதானத்தில்
கூட்டணி கட்சிகள் முன்னிலையில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் CV சண்முகம் MC சம்பத் மற்றும் அருண்மொழிதேவன் சொரத்தூர் ராஜேந்திரன் மற்றும். ராஜாராம் கர்ணா உட்பட பலரும் கலந்து கொண்டனர் முன்னதாக திரளாக கூடி இருந்த பொதுமக்கள் மற்றும்
கட்சி தொண்டர்களை கைகூப்பி வணங்கினார் முன்னதாக மாவட்ட செயலாளர்
MC சம்பத் பேசுகையில் இந்த நிகழ்வு 2024 எடப்பாடியார் அவர்கள் முதல்வராக வருவதற்கான நிகழ்வு என மகிழ்ச்சியுடன் பேசினார்
பின்னர் விழா பேருரை ஆற்றிய எடப்பாடியார் அவர்கள் கூறுகையில்
பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி நகர்புற தேர்தலில் தனித்து நின்றார்கள்
அப்பொழுது அதை பற்றி யாரும் கேட்கவில்லை அதே போல தான் அதிமுகவும் தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் புதிய தமிழகம் உட்பட கட்சியுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளோம். என்றார்
520 வாக்குறுதி கூறிய ஸ்டாலின் 10 சதவிதம் கூட நிறைவேற்றவில்லை
அதிமுகஆட்சியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 2500 ரூபாய் ரொக்க பணமும் பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி வெள்ளம் ஏலக்காய் முந்திரி திராட்சை கரும்பு உட்பட அனைத்து பொருள்களும் கொடுத்தோம் தற்பொழுது இந்த அரசு பொங்கல் பண்டிகை என்பது பூச்சி யுடை அரிசி
உருகிய வெல்லம் என தரமற்ற பொருட்களை ரேஷனில் கொடுத்தார்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பொங்கல் தொகுப்பில் உள்ள வெல்லம் கெட்டுவிட்டதால் அதை . மக்களுக்கு வினியோகம் செய்ய விடவில்லை வெல்லத்தில் மட்டும் இந்த அரசு ரூ500 கோடி உழல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன பொங்கல் தொகுப்பில் கூட உழல் செய்த ஒரே கட்சி திமுக கட்சி என கூறினார்