in

துரைமுருகனை பாராட்டுகிறோம் என திருவாரூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி


Watch – YouTube Click

துரைமுருகனை பாராட்டுகிறோம் என திருவாரூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி

திமுக ஆட்சியின் அவலங்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்லும் அமைச்சர் துரைமுருகனை பாராட்டுகிறோம் என திருவாரூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி

திருவாரூர் தனியார் அரங்கில் மாவட்ட பாஜக சார்பில், நடந்து முடிந்த நாகை லோக்சபை தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது ,

தேர்தலில் பாஜ கூட்டணி அமைத்தது குறித்து  கருத்து கூற முடியாது.

ஆனால் நடந்த லோக்சபை தேர்தலில் திமுக வின் வாக்கு 6 சதவீதம் சரிந்துள்ளது.மக்களின் ஆதரவு திமுக விற்கு கிடையாது. விஷ சாராய சாவுகள், கள்ளகுறிச்சி ,உடுமலைப்பேட்டை மாதிரி தொடர்ந்தால் மேலும் 15 சதவீத வாக்குகள் குறையும். திமுக அரசாங்கம் 2026ல் ஆட்சிக்கு வரமுடியாது.

லோக்சபையில் இயற்றப்பட்ட சட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் வக்கீல்கள் எதற்காக போராடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த போராட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன். லோக்சபையால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராக பேசுவது முறையல்ல. வக்கீல்கள் இதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

நீட்டை கொண்டுவந்தது மன்மோகன்சிங். 2013ல் காங்கிரஸ் –  திமுக கூட்டணி அரசாங்கம் தான் நீட் டை கொண்டுவந்தது . இந்த வழக்கு
சுப்ரீம் கோர்ட்டுக்கு போனதும் நீட் வேண்டும் என தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு தான் செயல்பாட்டில் உள்ளது. பாஜ அரசு நீட் டை கொண்டுவரவில்லை. அதை செயல்படுத்த உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். திமுக வினருக்கு சட்ட அறிவு எள் முனையளவாவது இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு போடுவதை யாரும் தடுக்கவில்லை.

மோடி பிரதமரான  பிறகு தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் வந்துள்ளது. ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் 15 சதவீதம் வெளி மாநில மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் அவசியம். நீட் வேண்டாமென பேசுவது முட்டாள்தனம். நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விவசாரணை போடப்பட்டுள்ளது.
47 சீட் கூடுதலாக கிடைத்துள்ளதால் இந்தியாவே கைக்குள் வந்துவிட்டதாக ராகுல்காந்நி நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதம் மிகப்பெரியளவில் வேரூன்றி உள்ளது. என்ஐஏ 10 இடத்தில் ரெய்டு நடத்தியுள்ளனர். இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாலின் அரசாங்கத்தில் கட்சி, ஆட்சி இரண்டிலும் கன்ட்ரோல் இல்லாமல் இருக்கிறது. சட்டசபையில் சபாநாயகர் எதேச்சதிகாரமாக செயல்படுவதும் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக வினரே போதை பொருட்கள் விற்கின்றனர். எனவே  அனைத்துவிதமான போதை பொருட்களும் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். ரூ.2 ஆயிரம் கோடிக்கு போதைப்பொருள் விற்றவர் திமுக வின் ஜாபர் சாதிக். சாராயம், விஷ சாராயத்துக்கு காரணமானவர்கள் திமுக வினர் தான்.

இதில், மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் சாராய கடையிலேயே போலி தான் விற்கபடுகிறது என்பது போல பேசியிருக்கிறார். சாரய கடை சரக்கில் கிக் இல்லை. அதனால் தான் விஷ சாராயத்துக்கு போகின்றனர் என ஓப்பனாக தெரிவித்துள்ளார். திமுக வின் அவலங்களை வெளிப்படையாக எடுத்துச்சொல்லும் அமைச்சர் துரைமுருகளை பாராட்டுகிறோம்.

அதனால் எல்லாவிதத்திலும் தோற்றுப்போன அரசாங்கத்திற்கு தலைமை தாங்குவதை விட  ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்வது ஸ்டாலினுக்கு கவுரம். இதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும் என எச் ராஜா. தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கண்டிஷனை மறந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா..விற்கு வந்து மாட்டிக்கிட்ட நயன்

பிரதமர் வீடு முன்பு விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திருவாரூரில் அய்யாக்கண்ணு பேட்டி