முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் முன்னிட்டு மதுரையில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 8வதுநினைவு தினம் முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுக மற்றும் பல்வேறு அமைப்பு சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக ஒருங்கிணைத்துக் குழு ஓபிஎஸ் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் தலைமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் அதிமுக கட்சி சார்பில் அவைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கட்சியின் முக்கிய நிர்வாகி கணேசன் ஆகியோர் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக மகளிர் அணி அனைத்து அதிமுக நிர்வாகிகள்மற்றும் பலர் கலந்து கொண்டனர்.