புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி அளிக்காமல் தொடர்ந்து புதுச்சேரி அரசை மோடி அரசாங்கம் புறக்கணிப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்….
பீகார் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கடைகளில் விளம்பர பலகைகளில் உரிமையாளரின் பெபயரை எழுத வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இது கண்டிக்கத்தக்கது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு தொழில் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு சிறுபான்மையினர் இருக்கக் கூடாது என்ற உள்நோக்கத்தோடு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல ஆனால் மத்திய அரசு இதில் வாய்மூடி மௌனமாக உள்ளது இன்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதற்கு காரணம் என்ன? இதுவரை மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை, காங்கிரஸ் ஆட்சியில் என்ன நிலை நீடித்ததோ அதே நிலைதான் தற்போதும் நீடித்து வருவதாக தெரிவித்த நாராயணசாமி….
புதுச்சேரி அரசை மோடி அரசாங்கம் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்பதற்கு இது மிகப்பெரிய உதாரணம் புதுச்சேரியை புறக்கணிப்பது தான் மோடியின் அமித்ஷாவின் கடமை என்றார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செயல்படுத்த வேண்டிய 66 திட்டங்களில் 32 திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது மீதி திட்டங்கள் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி… ரங்கசாமி ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் முழுமை பெறவில்லை என்றார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முதலமைச்சரின் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் கையூட்டு பெறுவதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி லஞ்சம் வாங்குபவர்கள் யார் என்று தெரிந்தும் முதலமைச்சரும் ஆளுநரும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.