புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் கடும் விமர்சனம்
2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார துவக்க பொதுக்கூட்டம் சாரம் அவ்வை திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் வாழ்வு தேச நலனை நாசமாக்கும் பாஜக மோடி அரசை தோற்கடிப்போம், மதசார்பற்ற இந்தியாவில் பாதுகாப்பும் புதுச்சேரி மக்கள் நலனை மீட்டெடுப்போம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுக்கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்…
கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நிற்கிறாரே நமச்சிவாயம். அவர் தான் எங்களது ஆட்சி கவிழ்ப்புக்கு கதாநாயகனாக இருந்தார், அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கு ஒற்றனாக இருந்தார்.
அப்போது கிரண்பேடி சுதந்திரமாக நம்மை ஆட்சி செய்யவிடவில்லை. தற்போது தமிழக முதலமைச்சரும் அந்த வேதனையை தான் அனுபவித்து வருகிறார். ஜனாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரதமருக்கு நம்பிக்கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு நபர் மீண்டும் நமக்கு பிரதமராக வரவேண்டுமா என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, புதுச்சேரி ஆட்சியில் பல துறைகளில் ஊழல் நடந்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள பாஜக என்.ஆர்.காங்கிரஸ் அரசு கமிஷன் அரசு என்றார். மேலும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் காங்கிரஸ் தலைவராக இருந்த போது ரங்கசாமியை பற்றி தவறு தவறாக பேசினார். இப்பொழுது சந்தர்பவாத அரசியல் செய்கிறார்.
காங்கிரஸில் இருந்தபோது நமச்சிவாயம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விடியோ காட்சி.
கட்சி மாறுபவர்கள் எல்லாம் இப்படித்தான் பேசுவார்கள் என்றும், கட்சி மாறின பிறகு நாக்கு பிறலும். ரங்கசாமி மாநில அந்தஸ்து வாங்கவில்லை. கட்சி நிர்வாகிகளை போடாதவர் என்ற கூறிவிட்டு தற்போது அவருடன் எப்படி பிரச்சாரம் செய்வார் என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, கட்சி மாறிகள், பச்சோந்திகள் இப்படிதான் இருப்பார்கள் என்றும், ஆனால் 6 அல்லது 7 கட்சி மாறினால் நமச்சிவாயம் நிலைமை என்றும், அதனால் தான் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ, பதவி இருக்கிறதோ இல்லையோ கெத்தா இருக்கலாம் என்றார். மேலும் நமச்சிவாயத்தின் அதிகாரப்பூர்வ சொத்து பட்டியலே 1000 கோடி ஆகும். ஆனால் தேர்தல் சொத்து பட்டியலில் 10 கோடி காட்டியுள்ளார். இவரை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். இவர்கள் கட்சி மாறுவதே சொத்து சேர்ப்பதற்காகத்தான் என நாராயணசாமி கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சமீபத்தில் தேர்தல் பத்திரம் என்ற ஊழல் அம்பலமான பிறகு மிகுந்த பதற்றத்திற்கு உள்ளான மோடி மற்றும் அமிஷா ஆகியோர் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காற்று இப்போது திசை மாறி வீசுகிறது என்றும், தென் மாநிலம் மட்டும் இல்லாமல் வட மாநிலங்களிலும் பாஜக தோற்கடிக்கப்படுவது உறுதி உறுதி என கூறினார். மேலும் புதுச்சேரியில் பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவதாகவும், அவரை கழட்டிவிட்டால் போதும் என்று முதலமைச்சர் ரங்கசாமி நினைத்திருக்கிறார் என கூறியவர், முதலமைச்சர் ரங்கசாமி மட்டும் இல்லாமல் பாஜக தேசிய தலைமையும் அமைச்சர் நமச்சிவாயத்தை நிற்க வைத்து அவர் தோற்று விடுவார் என்று தெரிந்தும், அதன் பிறகு உண்மான ஒரு ஆர்.எஸ்.எஸ் சேர்ந்த நபரை கொண்டுவர பாஜக தேசிய தலைமை நினைக்கிறது என கூறினார். அமைச்சர் நமச்சிவாயம் ஒரு பலிகாடாக ஆக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.