in

தமிழர்களை விமர்சித்தது அதிர்ச்சிகுள்ளதாக்குகிறது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம்


Watch – YouTube Click

தமிழர்களை விமர்சித்தது அதிர்ச்சிகுள்ளதாக்குகிறது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம்

முதலமைச்சருக்கும் பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதா.?. ரெஸ்டோ பார் விவகாரத்தில் முதலமைச்சரிடம் புகார் தெரிவிக்காமல் ஆளுநரிடம் புகார் தெரிவித்ததது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி.

விஷவாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த விவகாரம். தமிழர்கள் திறமையில் குறைந்தவர்கள் என ஆய்வு குழு கூட்டத்தில் தலைமை செயலர் சரத் சவுகான் அதிகாரிகள் மத்தியில் பேசியுள்ளார். தமிழர்களை விமர்சித்தது அதிர்ச்சிகுள்ளதாக்குகிறது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம்.

புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி முதல் அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி பதவியேற்பு பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதிலிருந்து பாஜனதாவுக்கும் என்.ஆர்.காங்கிரசுக்கும் கருத்து வேறுபாடோ, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அனைத்து மாநில பாஜனதா முதல்வர்களும், கூட்டணிக்கட்சி முதல்வர்களும் பங்கேற்ற நிலையில் ரங்கசாமி மோடியின் பதவியேற்பை புறக்கணித்தது கேள்விக்குறியாகவே உள்ளது. ரங்கசாமி எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் பாஜனதா எம்எல்ஏக்கள் ரகசிய பேச்சுவார்த்தை, கட்சித் தலைவருக்கு வைத்த கோரிக்கைகள், அவசரமாக எம்எல்ஏக்கள், அமைச்சர்களை முதல் அமைச்சர் விருந்துக்கு அழைத்தது எல்லாம் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜனதா கூட்டணியில் பிரச்சினை நடந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

கூட்டணியில் குழப்பம் நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மின்கட்டண உயர்வை ரத்து செய்வதுடன் ப்ரீபெய்டு மீட்டர் முறையையும் ரத்து செய்ய வேண்டும்.

விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்ததையடுத்து ஆய்வுக்குழு கூட்டத்தில் தலைமைச்செயலர் தமிழர்கள் திறமையில் குறைந்தவர்கள் என அதிகாரிகள் மத்தியில் பேசியுள்ளார். சூரத் குழுவை புதுச்சேரிக்கு வரவழைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை விமர்சித்தது அதிர்ச்சிகுள்ளதாக்குகிறது. தலைமைச்செயலர் தமிழ் சமூகத்தை குறை கூறியுள்ளது பற்றி கட்சித்தலைமையுடன் பேசி அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம்.

விஷவாயு விவகாரத்தில் நிரந்தர தீர்வுக்கு எவ்வித நவடிக்கையும் எடுக்கவில்லை. நிபுணர் குழு வந்து பார்த்து மாற்று நடவடிக்கை எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆய்வுக்குழு வந்தால்தான் பரிகாரம் கிடைக்கும். ஆட்சியாளர்கள்தான் இதற்கு பொறுப்போ ஏற்க வேண்டும்.

புதுச்சேரியில் 6.2 டன் சந்தனக் கட்டை, சந்தனதூள் தமிழக வனத்துறையால் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் நடத்த துறைகள் அனுமதி உரியமுறையில் பெறப்பட்டுள்ளதா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும். இதில் கேரளம், தமிழகம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்கள் சம்பந்தம் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றவேண்டும் .

ரெஸ்டோ பார் தொடர்பாக கூட்டணியிலுள்ள பாஜனதா அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் முதல் அமைச்சரிடம் மனு தரவில்லை. முதல் அமைச்சருக்கும் அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதா.? இனியாவது முதல்வர் ரங்கசாமி பள்ளி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை மூடுவாரா.?என கேள்வியெழுப்பினார்…


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் மின்கம்பம் விழுந்து பலியான இளைஞரின் குடும்பத்திற்கு 10 லட்சம்

மதுபான கடைகளும் ரெஸ்ட்ரோபார்களும் அகற்றப்படும் துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு