in

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்புரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்புரை

 

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா, தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா மற்றும் திருச்சுழி நரிக்குடி ஒன்றிய நிதி அளிப்பு பேரவை கூட்டம்; கட்சிக் கொடி ஏற்றி வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்புரை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் தோழர் நல்லகண்ணு நூற்றாண்டு விழா மற்றும் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய நிதி அளிப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.‌

நரிக்குடி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு ஆற்றிய பணிகள் குறித்தும், கட்சியின் வரலாறு குறித்தும், கட்சியில் தியாகம் செய்த மூத்த தலைவர்கள் குறித்தும் விளக்கினார்.

மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிதி அளிப்பு கூட்டத்தில் திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கிளை சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கட்சி வளர்ச்சி நிதி அளிக்கப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் மண்டபம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான லிங்கம் ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய கிளை இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.‌

What do you think?

திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை விரைவில் செயல்படுத்தக் கோரி தேனி ஆட்சியரிடம் மனு

 காய்சினிவேந்த பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கருட சேவை