in

பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு


Watch – YouTube Click

பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துச்சாமிபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசும்போது,

அதிமுக தோற்பது போல் தோன்றினாலும் மீண்டும் சிங்கம் போல் எழுந்து நிற்கும் கட்சி. எடப்பாடியார் கையிலே கட்சி தரமாக இருக்கின்றது.

புரட்சி தலைவருக்கு பிறகு உடைந்த கட்சியை மீட்டெடுத்தவர் புரட்சி தலைவி அம்மா. இன்று உச்சநீதிமன்றம் வரை சென்று இரட்டை இலையை மீட்டெடுத்து மானம் காத்த தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

அடிமட்ட தொண்டர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான பொறுப்பாளர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். அண்ணா திமுக தலைமையில் தான் கூட்டணி.

தனித்து நிற்போம் அண்ணா திமுக தலைமையில். நமது கூட்டணிக்கு பாமக, சரத்குமார், தேமுதிக உள்ளிட்டவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் அறிவிக்கும் போது திமுக கூடாரம் காலியாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 வருடங்களில் எந்த நலத்திட்டமும் செய்யவில்லை.

ரயில்வே பாலம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு பணம் வழங்கியது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். அடிக்கல் நாட்டியது நான். நாங்கள் கட்டி முடித்த பாலத்திற்கு வெள்ளை அடித்து அவர்கள் கல்வெட்டை வைத்து விட்டு சென்று விட்டனர். அந்த கல்வெட்டை உடைத்து எறிவோம்.

நீங்கள் பணம் ஒதுக்கி கட்டி அடிக்கல் நாட்டில் திறந்து கல்வெட்டை வைத்தால் நாங்கள் உடைக்க மாட்டோம். நாங்கள் பெற்ற பிள்ளைக்கு நீங்கள் யார் பெயர் வைப்பதற்கு. எங்களுக்கு பெயர் வைக்க தெரியாதா. ஆங்கில பெயர் கூட வைப்போம். உங்களுக்கு என்ன.

நீங்கள் வைத்தால் என்ன அர்த்தம். விருதுநகரில் 355 கோடி ரூபாய்க்கு மருத்துவ கல்லூரிக்கு என் தலைமையில் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டில் சென்றார். தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் முதல் கல்லூரி ஆக காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதை சாதித்து காட்டியவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மருத்துவ கல்லூரி கட்டடம் கட்டி முடித்த உடனே திறப்பு விழா ஏற்பாடு செய்வதற்காக எடப்பாடி அவர்களிடம் கூறினேன். அடுத்த ஆட்சி அமைத்த பின்னர் திறப்பு விழா வைத்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். அந்த சமயத்தில் எங்களுக்கு நேரம் சரியில்லாமல் கட்டம் வேலை செய்யாமல் போய்விட்டது.

வாக்காளர்கள் பீகாரில் இருந்து வந்த பிரசாத் கிஷோரிடம் மூளையை விலைக்கு வாங்கி வந்து விட்டனர். அவரது வாராரு வாராரு பாட்டை கேட்டு ஏதோ கொடுக்கப் போகிறார் என்று நினைத்து திமுகவுக்கு அதிக வாக்குகளை செலுத்தி விட்டனர்.

இருப்பினும் மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையிலேயே அதிமுக தோல்வியை தழுவி ஆட்சியை தவற விட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மருத்துவக் கல்லூரியை திறந்து அவர்கள் பெயரில் கல்வெட்டுகளை வைத்துவிட்டனர்.

இதனை அறிந்த பின்னர் அடிக்கல் நாட்டு விழா கல்வெட்டை நானே தயார் செய்து கொடுத்து இதை பதிக்கவில்லை என்றால் 12 மணிக்கு மேல் மாறுவேடம் போட்டு திறப்பு விழா கல்வெட்டை உடைத்து விடுவேன் என கூறினேன். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் மருத்துவக் கல்லூரியை கட்டியது நாங்கள்.

எனவே அடிக்கல் நாட்டிய கல்வெட்டு இல்லையென்றால் திறப்பு விழா கல்வெட்டு இருக்காது என கூறிய பின்னர் தற்போது பெரிய அளவிலான அடிக்கல் நாட்டியதற்கான கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் தயங்கிய போது மீண்டும் நாங்கள் வருவோம் அதிமுகவுக்கு அழிவே கிடையாது எடப்பாடியார் முதல்வராக மீண்டும் வருவார் என அதிகாரிகளை சமாதானப்படுத்தினேன்.

மத்தியில் இருக்கக்கூடியவர்களே பார்த்து அச்சப்படக்கூடிய வகையில் கட்சியை நடத்தக்கூடிய வல்லமை, துணிவு படைத்தவர் எடப்பாடியார் அவர்கள். எளிமையான வலிமையான தலைவர் வல்லமையான தலைவர்.

தற்போது விருதுநகர் மருத்துவ கல்லூரியில் இரண்டு கல்வெட்டுகளும் உள்ளது. அவர்கள் வைத்ததை பின்னால் நாங்கள் எடுத்து விடுவோம். இன்று எடுத்தால் கைது செய்து விடுவார்கள். எங்களை எப்போது கைது செய்யலாம் என திமுகவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நானும் ஆந்திரா கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கு சென்றேன். அங்கேயும் வந்து விடுகிறார்கள் சிறிது நாட்களுக்கு அமைதியாக இருப்போம். நேரம் நமக்கு வருகிறது அவர்களுக்கு முடிகிறது.

அரசு மருத்துவமனைகளில் நான் வாங்கி கொடுத்த நான்கு அவசர ஊர்திகள் மட்டுமே இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் புதிய ஆம்புலன்ஸ் எதுவும் வாங்கப்படவில்லை. கண் மருத்துவமனை எடப்பாடி யாரிடம் கூறி நான் வாங்கி கொடுத்தேன். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கோயமுத்தூருக்கு கொடுத்தாரோ இல்லையோ ராஜபாளையத்திற்கு அவ்வளவு திட்டங்களை வழங்கினார். பட்ஜெட்டில் பாதி தொகை விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. வேலை முடியும் நேரத்தில் தேர்தல் வந்துவிட்டது.

இன்றைய நிலையில் திட்டங்கள் அனைத்தையும் திமுகவினர் கொண்டு வந்ததை போல் திறந்து வைக்கின்றனர். ஆனால் இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என செய்தித்தாள்களில் செய்தியாக வெளியிடப்பட்டு வருகிறது. உண்மை மக்களுக்கும் தெரியும்.

மக்களை ஏமாற்றி பொய்யான வார்த்தையைச் சொல்லி ஓட்டு வாங்கிய கட்சி திமுக. ஓட்டு வாங்கிய முதல்வர் ஸ்டாலின். மக்களை ஏமாற்றி விட்டார். நீட் தேர்வு ரத்து செய்வோம் என்றார். அவரது பையனும் சொன்னார். மக்கள் நம்பினர்.

ரகசியத்தை வெளியே சொல்ல முடியாது என தெரிவித்தார். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறியவர் தற்போது 50 லட்சம் கையெழுத்து வாங்குகிறார். இதை யாரிடம் கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு கே டி ஆர் இடம் கொடுக்கப் போவதாக சொல்லி உள்ளார்.

வரும் தேர்தலில் டெல்லியில் நாங்கள் இருந்தால் அனைத்தும் செய்வோம் என பொய் சொல்லி வாக்கு கேட்பார்கள். இதை மக்கள் நம்பினால் அனைவரையும் நாடு கடத்தி விடுவார்கள்.


Watch – YouTube Click

What do you think?

தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் இடையை தள்ளுமுள்ளு

இடைநிலைப் பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பாக தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்