முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு உடல்நல குறைவு காரணமாக காலமானார் இவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்குவதுடன் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கவும் மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் அனைத்து விதமான அரசு நிகழ்வுகளும் இன்றைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் அரசியல் கட்சியினர் சார்பில் நடத்தப்பட இருந்த அனைத்து போராட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.