in

பாஜக இரட்டை வேடம் போடுகிறது புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு


Watch – YouTube Click

பாஜக இரட்டை வேடம் போடுகிறது புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

 

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

தமிழக முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லும் அண்ணாமலை, மெத்தனால் புதுச்சேரியில் இருந்து தான் சென்றது என தெரிய வந்தால் ரங்கசாமியை ராஜினாமா செய்ய சொல்லுவாரா என கேள்வி

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…

அகில இந்திய அளவில் நீட் தேர்வில் வினா தாள்கள் கசிவு மோசடி நடந்திருப்பது ஒவ்வொன்றாக வெளியே வந்துகொண்டு இருக்கிறது. ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. பல மாநிலங்களில் சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டார்.

கோச்சிங் நடத்தும் மாஃபியாக்களிடையே நீட் தேர்வு முழுமையாக சென்றுவிட்டது என்று கூறிய நாராயணசாமி இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வு முறைகேடு மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நெட் தேர்விலும் ஊழல் நடைபெறும் என அந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சியில் மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டு ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்றுள்ள கள்ள விஷ சாராயம் சம்பவம் வேறு எங்கும் இனி நடைபெற கூடாது. திமுக ஆட்சியில் மட்டுமல்ல அதிமுக ஆட்சியிலும் கள்ள சாராயம் விற்பனை நடந்துள்ளது. முதலில் கள்ளசாராயம் எங்கிருந்து வந்தது என தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷ சாராயம் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். புதுச்சேரியை சேர்ந்தவருக்கும் கள்ளசாராயம் கடத்தப்பட்டதில் சம்பந்தம் உள்ளது என்று குறிப்பிட்ட நாராயணசாமி தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கள்ளசாராயம் கடத்தியது புதுச்சேரியில் இருந்து என தெரிய வந்ததால் இங்கு ஆட்சியில் உள்ள பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமியை ராஜினாமா செய்ய சொல்லுவாரா? என்று கேள்வி எழுப்பிய அவர் இதில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது என்றார்

புதுச்சேரியில் கள்ள சாராயம் இல்லை என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். ஆனால் வேல்ராம்பட்டு பகுதியில் கள்ளசாரயம், பாக்கெட்டுகள், பாட்டில்களுடன் இருவரை திமுக எம்.எல்.ஏ பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இளம் வயது விதவைகள் அதிகம் உள்ளனர். காரணம் இளைஞர்கள் சாராயம் குடித்து அதிகம் உயிரிழந்துள்ளனர். இது வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே புதுச்சேரி அரசு ஏன் சாராயக்கடைகளை மூடக்கூடாது.

புதுச்சேரி மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் சாராயக்கடைகளை மூட வேண்டும். பார், ரெஸ்டோபார்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வரும் 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என அறிவிப்பு

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை….