3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா
திண்டிவனம் அடுத்த ஈச்சேரியில் இ என் எஸ்தமிழ்நாடு மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இலவச மருத்துவமனை கட்டுவதற்க்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இ என் எஸ் தமிழ் நாடு மக்கள் சேவை மற்றும் அன்பின் பாதை ஸ்ரீ கிருஷ்ணவேணி அம்மாள் சாரிடபிள் ட்ரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்கத்தின் நிறுவன தலைவரும், கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவருமான தொழிலதிபர் ஈசேரி சேகர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சேகர் கூறுகையில்.
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சரியான மருத்துவமனை இல்லாததால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக டயாலிசிஸ் செய்வதற்கு முண்டியம்க்கம், ஜிப்மர் உள்ளிட்ட பகுதிகளில் சென்று சரியான நேரத்தில் செய்ய முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதுடன், உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் 4 டயாலிசிஸ் மிஷின், நவீன பிரசவ அறை, பரிசோதனை கூடம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மருத்துவமனை மிக விரைவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது.
ஆகையால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவதுடன், மென்மேலும் பல்வேறு இடங்களில் இலவச மருத்துவமனை கட்டுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இதில் இயக்கத்தின் மாநில தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருக்தனர்.